வாஷிங்டன்:
நான் விலகிக்கிறேன்... நான் விலகிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார் பெர்னி சாண்டர்ஸ். இவர் யார் தெரியுங்களா?
அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் ஹிலாரிக்கு எதிரான போட்டியில் இருந்தவர்தான் இந்த பெர்னி சாண்டர்ஸ். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 8-ந்தேதி நடக்கிறது.
அதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் தேர்தலில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டார். அவருக்கு எதிராக ‘செனட்’ உறுப்பினர் பெர்னியும் களம் இறங்கினார். ஆனால் தேர்தலில் போட்டியிட தேவையான கட்சி நிர்வாகிகளின் ஆதரவு ஹிலாரிக்கு கிடைத்து விட்டது.
இருப்பினும் விடாப்பிடியாக வேட்பாளர் தேர்வு போட்டியில் இருந்து விலக பெர்னிசாண்டர்ஸ் மறுத்து வந்தார். கடைசி வரைக்கும் போராடுவேன்... போராடுவேன் என்று சூளுரைத்தார். இதற்கிடையில் என்ன மாயமோ மந்திரமோ... வேட்பாளர் போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென்று அவர் அறிவித்துள்ளார்.
நியுஹாம்ப் ஷிரில் போர்ட்ஸ்மவுத் என்ற இடத்தில் உயர்நிலைப் பள்ளியில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஹிலாரியுடன் அவர் பங்கேற்றார். அப்போது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
அதிபர் தேர்தலில் ஹிலாரியுடன் சேர்ந்து உழைத்து அவர் வெற்றிக்கு பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.