ஜிவி பிரகாஷ் நடிப்பில் அடுத்து 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் வெளிவரவுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. 


இதையடுத்து அவர் அறிமுக இயக்குனர் சக்தி முத்துசாமி இயக்கத்தில், தனது 8-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ க்ரீன் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. வழக்கம் போல், ஜிவி பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார். 


முதன்முறையாக ஜிவி பிரகாஷ் உடன் இந்த படத்தில் நடிகர் சரத் குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் இதில் இரண்டு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். இதற்காக தற்போது இவர், வாழ் பயிச்சி மேற்கொண்டு வருகிறார். 


மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக மராத்தி நடிகை வைபவி சந்தியாளா நடிக்கவுள்ளார்.  இவர் தில்லுக்கு துட்டு திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், அருண்ராஜா காமராஜ், ஆர்.ஜே.ப்ளேட் ஷங்கர், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். காமெடி என்டேர்டைனர் திரைப்படமாக இப்படம் உருவாக உள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: